உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட MRI நுண்ணாய்வுக் கருவி
April 1 , 2025 175 days 206 0
நுண்ணாய்வு/உள்ளாய்விற்கான செலவினைக் குறைப்பதற்காக இந்தியாவானது உள் நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தனது முதல் காந்த அதிர்வு வரைபடமாக்கல் (MRI) இயந்திரத்தை உருவாக்கியுள்ளது.
உள்ளாய்விற்கானச் செலவினை 30 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்க இந்த MRI இயந்திரம் உதவும்.
இந்த இயந்திரம் ஆனது, புது டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம் மற்றும் பயன்பாட்டு நுண்ணலை மின்னணு பொறியியல் மற்றும் ஆராய்ச்சி சமூகம் (SAMEER) ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் விளைவாக உருவாக்கப்பட்டது.