உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு செயற்கைக்கோள்களுக்கான அணு கடிகாரம்
May 16 , 2018 2636 days 1060 0
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இடங்களின் (Location) துல்லியமான தரவுகளை அளவிடுவதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட வழிகாட்டு செயற்கைக் கோள்களில் பயன்படுத்தப்படும் அணு கடிகாரங்களை உருவாக்கியுள்ளது.
தற்போது வரை, இஸ்ரோ தன்னுடைய வழிகாட்டு செயற்கைக் கோள்களுக்கான அணு கடிகாரங்களை ஐரோப்பிய விண்வெளி உற்பத்தியாளரான ஆஸ்ட்ரியம் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்து வந்தது.
இந்த உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணு கடிகாரமானது, அகமதாபாத்திலுள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தால் (Space Application Centre – SAC) தயாரிக்கப்பட்டது. தற்போது இந்த அணு கடிகாரம் தொடர்ச்சியான தகுதிகாண் சோதனைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள வெவ்வேறு விண்கலங்களின் அணு கடிகாரங்களுக்கிடையேயான நேர வேறுபாடானது, புவியின் மீதுள்ள ஏதாவதொரு பொருள் அல்லது வழிகாட்டு பெறுநர்களின் (Navigation Receiver) துல்லிய நிலைநிறுத்தல்களை அளவிட பயன்படுகிறது.
குறிப்பு :
ஒரு வழிகாட்டு ஏவுகணையில் மூன்று அணு கடிகாரங்கள் பொருத்தப்படுகின்றன. இதனுடன் படிக கடிகாரங்களும் (Crystal Clocks) பொருத்தப்படுகின்றன. இந்த படிக கடிகாரங்கள் அணு கடிகாரங்களைப் போல துல்லியமானவை அல்ல.