உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரத்த ஓட்ட மடைமாற்றுக் குழாய்
January 24 , 2021 1796 days 836 0
திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின் தேசிய விண்வெளி ஆய்வகங்கள் ஆகியவை இணைந்து இரத்த ஓட்டத்தின் திசையை மடைமாற்றும் ஒரு குழாயை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளன.
இது இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் தயாரிப்பாகும்.
இது இறக்குமதி செய்யப்படும் குழாய்களை விடவும் விலை குறைவானது ஆகும்.
மூளையில் உள்ள தமனிகளின் அடைப்பிலிருந்து இரத்த ஓட்டத்தைத் திசை திருப்ப இது பயன்படுகிறது.
இது இதயத்தில் உள்ள துளை வெகு சிறப்பாக குணமடைய உதவும் ஒரு சாதனமாகும்.