2021 ஆம் ஆண்டு உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து என்ற ஒரு மசோதாவினை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இது 1917 ஆம் ஆண்டு உள்நாட்டு கப்பல் போக்குவரத்துச் சட்டத்திற்கு மாற்றாக அமல்படுத்தப் படும்.
இந்த மசோதா நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறைக் கட்டமைப்பை வழங்க முனைகிறது.
இது ஒரு மின்னணுத் தளத்தில் கப்பல் குறித்த தகவல்கள், அதன் பதிவு மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களைப் பதிவு செய்வதற்கான ஒரு மைய தரவுத் தளத்தினை வழங்குகிறது.
கப்பல்கள், படகுகள், பாய்மரக் கப்பல்கள், கொள்கலன் ஏந்திச் செல்லும் கப்பல்கள் மற்றும் பயணப் படகுகள் உள்ளிட்ட இயந்திரமயமாக்கப் பட்ட உள்நாட்டுக் கப்பல்களுக்கான வரையறையை இம்மசோதா வழங்குகிறது.
உள்நாட்டு நீர்நிலைகளில் கப்பல்களை இயக்குவதற்கு என்று அனைத்துக் கப்பல்களும் ஆய்வுச் சான்றிதழ் மற்றும் பதிவுச் சான்றிதழ் போன்றவற்றைப் பெற்றிருக்க வேண்டும்.
அவசரகாலத் தயார்நிலை, மாசுக் கட்டுப்பாடு மற்றும் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தினை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் மேம்பாட்டு நிதி உருவாக்கப் படும்.