உள்நாட்டுப் புலம்பெயர்வு குறித்த உலகளாவிய அறிக்கை 2025
May 17 , 2025 49 days 109 0
உள்நாட்டுப் புலம்பெயர்வு கண்காணிப்பு மையமானது (IDMC) சமீபத்தில் இந்த ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் சுமார் 45.8 மில்லியன் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப் பட்டதுடன் பேரிடர் தொடர்பான உள்நாட்டுப் புலம்பெயர்வுகளானது தற்போது உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளதுன.
2024 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதிகளில் மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் பதிவானது.
மோதல், வன்முறை மற்றும் பேரழிவுகள் காரணமாக சுமார் 19.3 மில்லியன் மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய ஒரு கட்டாயச் சூழல் ஏற்பட்டது என்ற நிலையில் இதில் 7.8 மில்லியன் பேர் பேரிடர்கள் காரணமாக இடம்பெயர்ந்தனர்.
கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் சுமார் 16.2 மில்லியன் உள்நாட்டுப் புலம் பெயர்வுகள் பதிவாகின என்ற நிலையில் அவற்றில் சுமார் 14.8 மில்லியன் பேர் பேரிடர் காரணமாக இடம் பெயர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டில் 14.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்ததுடன், (பேரிடர் காரணமாக 13.1 மில்லியன் பேர்) அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
தெற்காசியாவில் 9.2 மில்லியன் உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் அவற்றில் கிட்டத்தட்ட அனைத்தும் பேரிடர்கள் காரணமாக ஏற்பட்டவை ஆகும்.
மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் சுமார் 5.7 மில்லியன் அளவு உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் பதிவாகியுள்ளன என்ற நிலையில் இதில் சுமார் 599,000 பேரிடர்கள் காரணமாக ஏற்பட்டவை.
ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் இந்த ஆண்டில் 846,000 என்ற மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உள்நாட்டுப் புலம்பெயர்வுகள் பதிவாகின என்ற ஒரு நிலையில் அவற்றில் சுமார் 358,000 பேரிடர் காரணமாக ஏற்பட்டவையாகும்.