TNPSC Thervupettagam

உள்நாட்டு உயிரி எரிபொருள்

May 27 , 2019 2262 days 748 0
  • 10 சதவிகித அளவிலான உள்நாடு உயிரி விமான எரிபொருளை உள்ளடக்கிய கலப்பின விமான எரிபொருளைப் பயன்படுத்திப் பறந்திடுவதற்கு இந்திய விமானப் படையின் AN-32 விமானத்திற்கு முறையாக பறப்பதற்கானச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.
  • உள்நாட்டு உயிரி விமான எரிபொருளானது முதலில் 2013 ஆம் ஆண்டில் CSIR-IIP (Council of Scientific & Industrial Research - Indian Institute of Petroleum) ஆய்வகத்தால் டேராடூனில் தயாரிக்கப்பட்டதாகும்.
  • இது சத்தீஸ்கரின் உயிரி டீசல் மேம்பாட்டு ஆணையத்திடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஜத்ரோபா எண்ணெயைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகும்.
  • இந்த உயிரி எரிபொருளானது விவசாயிகள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மரத்திலிருந்துப் பெறப்பட்ட எண்ணெயிலிருந்துத் தயாரிக்கப்படும்.
  • இதன்மூலம் இது அவர்களது வருமானத்தை கணிசமான அளவு உயர்த்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்