உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் – 660 கோடிகளைப் பத்திரங்கள் வழியாக திரட்டியது
October 14 , 2017 2993 days 2191 0
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் “இந்திய அரசால் முழுமையாக சான்றளிக்கப்பட்ட பத்திரங்கள்” என்ற வகையில் 660 கோடி ருபாய் திரட்டியுள்ளது.
இந்தப் பத்திரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் முழுவதும் தேசிய நீர்வழிகளை மேம்படுத்துவதற்கு தேவைப்படும் மூலதனச் செலவிற்காக உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தால் பிரத்யேகமாக பயன்படுத்தப்படும்.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம்
இந்தியாவில் நீர்வழிப் போக்குவரத்திற்கு பொறுப்பானதாக ஆரம்பிக்கப்பட்ட சட்டப்பூர்வ அமைப்பு இதுவாகும். இதன் தலைமையகம் உத்திரப் பிரதேசத்தின் நொய்டாவில் அமைந்து உள்ளது.