TNPSC Thervupettagam

உள்நாட்டு நுழைவு அனுமதி முறை நீக்கம் – லடாக்

August 10 , 2021 1470 days 629 0
  • லடாக் ஒன்றியப் பிரதேசத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் அனைத்துக் குடிமக்களும் உள்நாட்டு நுழைவு அனுமதி பெறும் முறையை (Inner Line Permit – ILP) லடாக் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
  • நியோமா, நுப்ரா மற்றும் லே & கார்கில் மாவட்டத்திலுள்ள உள்ள பகுதிகள் போன்ற எல்லைப் பகுதிகளின் சுற்றுலா வட்டாரப் பகுதிகளில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான நாள் வரம்பானது ஏழு நாட்களிலிருந்து 15 நாட்களாகத் தளர்த்தப் பட்டுள்ளது.
  • ILP (Inner Line Permit) என்பது ILP அமைப்பின் கீழ் பாதுகாக்கப்பட்டப் பகுதிகளில் வருகை தர விரும்புவோர் () அப்பகுதியைச் சாராதோர் () அங்கு தங்க விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய ஒரு ஆவணமாகும்.
  • தற்போது அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகாலாந்து உள்ளிட்ட 4 வடகிழக்கு மாநிலங்கள் இந்த அமைப்பின் கீழ் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்