உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்பு
October 12 , 2024 274 days 207 0
உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் தொடர்புகளை அளவிடச் செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் உலகளாவிய தரநிலை சாத்தியமில்லை என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்பு என்பது ஒளியை விட வேகமாகத் தொடர்பு கொள்ள அனுமதிக்காத, தொலைதூர இயற்பியல் பொருட்களுக்கு இடையே உள்ள ஒரு விசித்திரமான தொடர்பை விவரிக்கிறது.
இந்தப் புதிய ஆராய்ச்சி ஆனது உள்ளகக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் தொடர்புகளின் சாத்தியமானப் பயன்பாடுகளை விரிவுபடுத்துகிறது.
இவை ஏற்கனவே பாதுகாப்பான தகவல் தொடர்பு, சீரற்ற எண் உருவாக்கம் மற்றும் குறியாக்க விசை உருவாக்கம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
பாதுகாப்பான தகவல்தொடர்பு, சீரற்ற எண் வழங்கீடு மற்றும் இணைய சங்கேத (கிரிப்டோகிராஃபிக்) குறியீடு உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.