உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் 2024 மற்றும் 2025
June 16 , 2026 71 days 222 0
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான 'உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்' விருதுகளை சங்கீத நாடக அகாடமி அறிவித்துள்ளது.
இசை, நடனம், நாடகம், நாட்டுப்புற மற்றும் பழங்குடியினக் கலைகள், பொம்மலாட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்த்து கலைகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த 106 இளம் கலைஞர்களை இந்த விருதுகளுக்காக அகாடமி தேர்ந்தெடுத்துள்ளது.
இவ்விருது ₹25,000 ரொக்கப் பரிசு மற்றும் தாமிரப்பட்டயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
இந்தியாவின் நிகழ்த்து கலை மரபுகளுக்கான இளம் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
2024-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்களில் ஜே.ஏ. ஜெயந்த் (கர்நாடக இசைக் கருவி-புல்லாங்குழல்) மற்றும் கோபிகா ஜி. நாத் (மோகினியாட்டம்) ஆகியோரும், 2025-ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்களில் ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் (கர்நாடக வாய்ப்பாட்டு) மற்றும் அஸ்வதி சங்கர்லால் (மோகினியாட்டம்) ஆகியோரும் அடங்குவர்.