உஸ்பெகிஸ்தான் நாட்டின் அரசியலமைப்பிற்கான பொது வாக்கெடுப்பு
May 6 , 2023 823 days 363 0
தமது நாட்டின் அரசியலமைப்பை மாற்றி எழுத வேண்டும் என்ற அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் முயற்சிக்கு உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுமார் 90.21% வாக்காளர்கள் சாதகமாக வாக்களித்தனர்.
இந்தப் பொது வாக்கெடுப்பானது, முன்னாள் சோவியத் குடியரசினைச் சேர்ந்த நாட்டு மக்களுக்கு அதிகச் சுதந்திரத்தை வழங்கும் என்று உறுதியளித்துள்ளது.
மேலும், இது அதிபரின் ஆட்சியினை அவரது தற்போதைய இரண்டு முறை என்ற கால வரம்பிற்கு அப்பால் நீட்டிப்பதனையும் உள்ளடக்கியது.
மேலும், இந்தப் புதிய அரசியலமைப்புச் சட்டமானது அதிகப்படியான ஊடகச் சுதந்திரம் மீதான உறுதியினையும் அளிக்கிறது.