2025–26 ஆம் ஆண்டின் ராபி பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (P&K) உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய (NBS) விகிதங்களை மத்திய அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
யூரியா அல்லாத உரங்களுக்கான முந்தைய தயாரிப்பு அடிப்படையிலான மானிய முறையை மாற்றுவதற்காக NBS திட்டம் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
இது இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள உரத் துறையால் நிர்வகிக்கப் படுகிறது.
இந்தத் திட்டமானது, நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) மற்றும் சல்பர் (S) உள்ளிட்ட ஒரு கிலோகிராம் ஊட்டச்சத்துக்களுக்கு ஒரு நிலையான மானியத்தை வழங்குகிறது.
உர நிறுவனங்கள் ஆனது அதிகபட்ச சில்லறை விலைகளை (MRPs) நியாயமான வரம்புகளுக்குள் நிர்ணயிக்கலாம் அதே நேரத்தில் யூரியா சட்டப்பூர்வ விலைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்தத் திட்டமானது, டை-அம்மோனியம் பாஸ்பேட் (DAP) மற்றும் NPKS தரங்கள் உள்ளிட்ட 28 தர P&K உரங்களை உள்ளடக்கியது.