TNPSC Thervupettagam

ஊட்டி பெயர் மாற்றக் கோரிக்கை

July 22 , 2026 13 hrs 0 min 42 0
  • உதகமண்டலத்தை அதிகாரப்பூர்வமாக 'ஊட்டகமண்ட்' (ஊட்டி) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நீலகிரி மக்கள் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளனர்.
  • பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஊட்டகமண்ட் (ஊட்டி) என்ற பெயருக்குப் பதிலாக, தற்போதைய அதிகாரப்பூர்வப் பெயரான உதகமண்டலம் 1972 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • 'ஊட்டகமண்ட்' என்ற பெயர் ஆங்கிலத்திலிருந்து உருவாகவில்லை என்றும், அது பழங்குடியினரான படுகர் மொழியின் "ஹொட்டெகெமண்ட்" (Hottegemund) என்ற பெயரிலிருந்தே உருவானது என்றும் வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன.
  • தோடர், படுகர் மற்றும் கோத்தர் சமூகங்கள் உட்பட இப்பகுதியின் பூர்வீகப் பாரம்பரியத்தை அங்கீகரிப்பதே இந்தக் கோரிக்கையின் நோக்கமாகும்.
  • ரெவ். ஏ. மெட்ஸ் (1830), சர் பிரடெரிக் பிரைஸ் (1908) மற்றும் படுகர்-ஆங்கில அகராதி (1992) ஆகியவற்றின் வரலாற்றுப் படைப்புகள் இந்தப் பெயரின் தோற்றத்தை படுகர் மொழியிலிருந்தே கண்டறிகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்