IFAD என்ற அமைப்பின் ஊரக மேம்பாட்டு அறிக்கையானது (2021) “கிராமப்புறச் செழிப்பிற்கான உணவு முறைகளை மாற்றியமைத்தல்” என்பதன் மீது ஈடுபாடு செலுத்துகிறது (IFAD – International Fund for Agricultural Development – வேளாண் மேம்பாட்டிற்கான சர்வதேச நிதியம்).
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகள் உணவு முறைகள் குறித்த உச்சி மாநாட்டின் போது வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையானது கிராமப்புற பண்ணைகளிலும், பண்ணைச் செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் உள்ளூர், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களிலும் அரசு முதலீட்டின் முக்கியத்துவத்தினை வலியுறுத்துகிறது.
அந்தச் செயல்பாடுகளாவன: சேமிப்பு, செயல்முறை, சந்தைப்படுத்துதல் மற்றும் உணவு விநியோகம் ஆகியனவாகும்.