January 29 , 2022
1284 days
943
- சர்வதேச வெளிப்படைத் தன்மை என்ற நிறுவனமானது 2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் கண்ணோட்டக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- இதில் இந்தியா 85வது இடத்தினை (40 மதிப்புகளுடன்) பெற்றுள்ளது.
- இத்தரவரிசையில் டென்மார்க், பின்லாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் ஒரு சேர (88 மதிப்புகளுடன்) முதலிடத்தைப் பெற்றுள்ளன.
- ஒவ்வொரு நாட்டின் பொதுத் துறையும் எந்த அளவு ஊழல் நிறைந்ததாகக் கருதப் படுகிறது என்பதை இந்தத் தரவரிசை மதிப்பிடுகிறது.
- இந்த மதிப்பீட்டின் முடிவுகள் 0 (அதிக ஊழல்) முதல் 100 (ஊழல் அற்ற நாடு) வரையிலான அளவீட்டில் வழங்கப் படுகின்றன.
- இந்தத் தரவரிசையில் 180 நாடுகள் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளன.

Post Views:
943