TNPSC Thervupettagam

ஊழல் கண்ணோட்ட அறிக்கை - 2019

January 27 , 2020 1989 days 902 0
  • இந்த அறிக்கையானது 1995 ஆம் ஆண்டு முதலாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் (Transparency International) என்னும் நிறுவனத்தால் தயாரித்து வெளியிடப்படுகின்றது.
  • 12 கணக்கெடுப்புகளிலிருந்து உலகெங்கிலும் உள்ள நாடுகளை வரிசைப் படுத்துகின்ற இது ஒரு கூட்டு அறிக்கையாகும்.
  • இது பொதுத்துறை நிறுவனங்களில் ஏற்படும் ஊழலின் அளவுகளைப் பொறுத்து 180 நாடுகளையும் பிராந்தியங்களையும் வரிசைப்படுத்துகின்றது.
  • இது பூஜ்ஜியத்திலிருந்து 100 வரையிலான அளவைப் பயன்படுத்துகின்றது. இதில் பூஜ்ஜியம் மிக அதிகமான ஊழல் நிறைந்ததாகவும்  100 ஊழலற்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
  • 2018 ஆம் ஆண்டில் 78வது இடத்திலிருந்த இந்தியாவானது தற்போது 41 மதிப்பெண்களுடன், 80வது இடத்தில் உள்ளது.
  • இந்தத் தரத்தை சீனா, பெனின், கானா மற்றும் மொராக்கோவும் பகிர்ந்து கொள்கின்றன.
  • டென்மார்க் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் முதலிடத்தையும், பின்லாந்து, சிங்கப்பூர், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் பத்து இடங்களையும் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்