1988 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் அரசியலமைப்பு செல்லு படியாகும் தன்மை குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஒரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளது.
ஊழல் தடுப்புச் (திருத்தம்) சட்டம், 2018 மூலம் பிரிவு 17A அறிமுகப்படுத்தப் பட்டது.
உத்தியோகப்பூர்வக் கடமைகளை நிறைவேற்றுவதில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஒரு அரசு ஊழியருக்கு எதிராக எந்தவொரு விசாரணை அல்லது விசாரணையையும் நடத்துவதற்கு முன், தகுதி வாய்ந்த அதிகாரியின் முன் ஒப்புதல் தேவையாகும்.
இந்த விதியை எதிர்த்து பொது நல வழக்கு மையம் (CPIL) வழக்கு தொடுத்தது.
உச்ச நீதிமன்ற அமர்வு ஆனது 17A பிரிவின் செல்லுபடியாகும் தன்மை குறித்து மாறு பட்ட நீதித்துறை கருத்துக்களை வெளிப்படுத்தியது.