இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பானது (Confederation of Indian Industry - CII) “எஃகு இந்தியா 2019: முக்கியத் துறைகளில் உலோகத்தின் தீவிரத் தன்மையை ஏற்படுத்துதல்” என்ற ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் எஃகின் நுகர்வு அதிகரிப்பதற்கான உத்திகள் மற்றும் கிராமப் புறங்களில் எஃகின் பயன்பாட்டை ஊக்குவித்தல் ஆகியவை குறித்து விவாதிக்கப் பட்டது.
இந்தக் கருத்தரங்கானது 2030 ஆம் ஆண்டிற்குள் 300 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி இலக்கை (தேசிய எஃகு கொள்கையின்படி) அடைய இந்தியாவிற்கு உதவ இருக்கின்றது.
இந்த நிகழ்வில் இந்தியாவில் எஃகுப் பயன்பாட்டை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட “இசப்தி இராடா” என்ற ஒரு பிரச்சாரம் பற்றி விவாதிக்கப் பட்டது.
இந்திய இறகுப்பந்தாட்டவீரரான பி.வி. சிந்து இந்த இசப்தி இராடாவின் தூதராக உள்ளார்.