எஃகு உருக்குக் கசட்டினைப் பயன்படுத்திச் சாலையமைக்கும் தொழில்நுட்பம் குறித்த முதலாவது சர்வதேச மாநாடு
July 14 , 2024 302 days 312 0
CSIR-CRRI மற்றும் PHDCCI ஆகியவை இணைந்து எஃகு உருக்குக் கசட்டினை நன்கு பயன்படுத்திச் சாலையமைக்கும் ஒரு தொழில்நுட்பம் குறித்த முதலாவது சர்வதேச மாநாட்டினை புது டெல்லியில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்வின் போது, சாலைக் கட்டுமானத்தில் எஃகு உருக்குக் கசடுகளை நன்கு பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது.
இந்தத் தொழில்நுட்பமானது, எஃகு உற்பத்திக் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு நன்கு உட்படுத்தி, வலுவான, நீடித்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த வகையிலான சாலைகளை உருவாக்குகிறது.
செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட எஃகு உருக்குக் கசடு அதிக வலிமை, கடினத் தன்மை, தேய்மான எதிர்ப்புத் திறன் மற்றும் வடிகால் திறன் ஆகியவற்றை கொண்டு உள்ளது.
இதன் மூலம் சுமார் 1.8 பில்லியன் டன்கள் இயற்கையான சாலை அமைப்பு மூலப் பொருட்களுக்கான இந்தியாவின் வருடாந்திரத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும்.
இந்தியாவில் முதல் முறையாக எஃகு உருக்குக் கசட்டினைப் பயன்படுத்தி சூரத்தில் சாலை அமைக்கப்பட்டது.