எஃகு உருக்கு கசடினைப் பயன்படுத்தி சாலையமைக்கும் தொழில்நுட்பம்
July 23 , 2023 714 days 338 0
உலகிலேயே முதல்முறையாக எஃகு உருக்கு கசடினைப் பயன்படுத்தி சாலை அமைக்கும் புதிய தொழில்நுட்பத்தினை இந்தியா உருவாக்கியுள்ளது.
எஃகு ஆலைகளில் இருந்து வீணாக வெளியேறும் எஃகு உருக்கு கசடுகளைப் பெருமளவில் சாலை கட்டமைப்பிற்காகப் பயன்படுத்துவதற்கு இந்த நுட்பம் வழிவகை செய்கிறது.
சாலைல் கட்டமைப்பில் எஃகு உருக்கு கசடுகளைப் பயன்படுத்துவதற்கான இந்தத் தொழில்நுட்பத்தினை மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
இது எஃகு ஆலைகளில் இருந்து வெளியாகும் எஃகு உருக்கு கசடுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்தப் பிரச்சனைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எஃகு உருக்கு கசடு என்பது எஃகு உற்பத்தியின் போது உற்பத்தியாகும் கழிவுகள் ஆகும்.
இவை வழக்கமான சாலைக் கட்டமைப்பு நடைமுறைகளை விட தோராயமாக 30 சதவிகிதம் செலவு குறைந்தது மற்றும் எதிர்பாராத வானிலைச் சூழல்களுக்கு ஏற்றத் தகவமைப்பு மற்றும் எதிர்ப்புத் திறன் கொண்டவை ஆகும்.