எகிப்து குடியரசுத் தலைவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுதல்
March 30 , 2018 2680 days 952 0
எகிப்து குடியரசுத் தலைவர் அப்துல் பதா அல்-சீசி 92 சதவிகித பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாக மீண்டும் ஒருமுறை நான்கு வருட பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
ர்.
சீசி தன்னுடைய ஒரே போட்டியாளரான அல்கத் கட்சித் தலைவர் மூசா முஸ்தபா மூசா என்பவரை எதிர்த்து 90 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.
2011 புரட்சிக்குப் பிறகு, முதன் முறையாக 2013ல் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முகமது மார்சியை, அவரது ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் காரணமாக அவரைத் தூக்கியெறிய இராணுவம் நடத்திய புரட்சிக்கு சீசி தலைமை தாங்கினார். அவர் 2014ம் ஆண்டு நான்கு வருட குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.