எடுத்து செல்லக் கூடிய அளவிலான குளிர்பதன சேமிப்பு சாதனம்
November 13 , 2018 2542 days 861 0
இந்திய தொழில்நுட்பக் கழகம் - மதராஸ் (IIT- Madras) ஆனது காய்கறி, பழங்கள் மற்றும் இதரப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடிய சூரிய மின் சக்தியால் இயங்கும் சிறிய அளவிலான குளிர்பதன சேமிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளது.
இது 500 கிலோ கொள்ளளவு உடையது. இது போதுமான காலத்திற்கு தங்கள் விளைபொருட்களை சேமித்து வைக்க விவசாயிகளுக்கு உதவும்.
இதன் முதல் சாதனம் சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் மதுராந்தகத்தில் உள்ள பண்ணையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இது 4C முதல் 10C வரையிலான வெப்பநிலை வரம்பில் சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது.
இந்த திட்டமானது அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை & IIT-M ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது.