எடெல்கிவ்-ஹூருன் இந்தியா மனித இனப் பற்றாளர் பட்டியல் 2024
November 11 , 2024 190 days 252 0
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சிவ் நாடார் ஐந்து ஆண்டுகளில் மூன்றாவது முறையாக இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
அவர் 2024 ஆம் நிதியாண்டில் 2,153 கோடி ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.
சுமார் 407 கோடி ரூபாய் நன்கொடையுடன் முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
பஜாஜ் குழுமமானது சுமார் 352 கோடி ரூபாய் நன்கொடையுடன் இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
இதில் கௌதம் அதானி 330 கோடி நன்கொடையுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.
18 நபர்கள் 100 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளனர் என்ற நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் வெறும் 9 பேராக இருந்த எண்ணிக்கையில் இருந்து குறிப்பிடத்தக்க ஒரு அதிகரிப்பாகும்.