அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 3,097 மெகாவாட் திறன் கொண்ட எட்டாலின் நீர்மின் நிலையத்திற்கு (HEP) சுற்றுச்சூழல் அனுமதியை வழங்க நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டத்தில் டிரி மற்றும் டாங்கோன் (டாலோ) நதிகளில் கற்காரைகளால் ஆன ஈர்ப்பு விசை சார்ந்த இரண்டு அணைகள் கட்டுவது அடங்கும்.
2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தினால் முதல் நிலை வன அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டது.