TNPSC Thervupettagam

எட்ருஸ்கன் நாகரிகம் - பண்டைய கல்லறை கண்டுபிடிப்பு

October 1 , 2026 6 days 96 0
  • மத்திய இத்தாலியின் வுல்சியில் உள்ள பொலெட்ராரா இடுகாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் க்செல் (Stéphane Gsell) அடக்கம் செய்யப்பட்ட மேட்டை முதன் முதலில் அடையாளங்கண்ட 137 ஆண்டுகளுக்குப் பிறகு, 2,700 ஆண்டுகள் பழமையான எட்ருஸ்கன் கல்லறையைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • வுல்சி நகரத்தின் ஆதிக்கம் அதன் உச்சத்தில் இருந்தபொழுது, அதாவது கிமு 7-வது நூற்றாண்டைச் சேர்ந்ததாக இந்தக் கல் அறையைக் கொண்ட கல்லறை காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தக் கல்லறையில் தங்கம் மற்றும் வெண்கலப் பொருட்கள், ஆயுதங்கள், நகைகள், தேர் பாகங்கள், உடைகள், அரிய வகை காலணிகள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு முழுமையான விருந்துப் பொருட்கள் போன்றவை உள்ளன.
  • ரோட்ஸ் நகரத்தைச் சேர்ந்த ஒரு வெண்கல முக்காலி, எட்ருஸ்கன் சமூகமானது பரந்த மத்திய தரைக்கடல் உலகத்துடன் நீண்ட தூரத் தொடர்புகளைக் கொண்டிருந்ததைக் காட்டுகிறது.
  • இந்தக் கல்லறை "க்செல் டுமுலஸ்" (Gsell tumulus) உடன் இணைக்கப்பட்டிருந்தது, இதனை க்செல் 1889 ஆம் ஆண்டில் வரைபடத்தில் குறித்தார், ஆனால் குறைந்த நேரமும் நிதியும் காரணமாக அவரால் அகழ்வாராய்ச்சி செய்ய முடியவில்லை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்