எண்ணிம ரீதியான குற்றப் பதிவு மோசடியில் முதல் தண்டனை- மேற்கு வங்காளம்
July 25 , 2025 2 days 31 0
எண்ணிம ரீதியான குற்றப்பதிவு என்ற இணையவெளி மோசடி வழக்கில் இந்தியாவின் முதல் தண்டனை இதுவாகும்.
இந்தத் தீர்ப்பில், மேற்கு வங்காள நீதிமன்றத்தினால் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தத் தீர்ப்பு நாடியா மாவட்டத்தில் உள்ள கல்யாணி நீதிமன்றத்தால் வழங்கப் பட்டது.
அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 316(2)/317(4)/318(4)/319(2)/ 336(3)/338/ 340(2) /351(2)/3(5)/61(2) பிரிவுகள் மற்றும் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66C மற்றும் 66D ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.