TNPSC Thervupettagam

எண்ணெய் விதைகள் மற்றும் பருப்புகள் கொள்முதல்

April 22 , 2020 1932 days 744 0
  • இந்திய உணவுக் கழகம் (FCI - Food Corporation of India) மற்றும் இந்திய தேசிய வேளாண் மற்றும் கூட்டுறவுச் சந்தை (NAFED - National Agricultural Cooperative Marketing of India) ஆகியவை விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்புகள் ஆகியவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்கின்றன.
  • தற்பொழுது, ராபி காலப் பயிரினங்களுக்கான விலை ஆதரவுத் திட்டமானது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
  • NAFED என்பது நாட்டில் உள்ள வேளாண் விளைபொருட்களின் அனைத்துக் கூட்டுறவுச் சந்தையிடல் அமைப்புகளுக்கான ஒரு தலைமை அமைப்பாகும்.
  • NAFED ஆனது வேளாண் விளை பொருட்களைத் தவிர, வனத்தில் விளைந்த பொருட்களையும் கொள்முதல் செய்கின்றது.
  • இது “பசுமை நடவடிக்கை” (Operation Greens) என்பதின் கீழ் நாட்டில் விலை நிலைத் தன்மைக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு தலைமை நிறுவனமாக ஏற்படுத்தப் பட்டு உள்ளது. 
  • “Operation Greens” ஆனது 2018-19 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
  • இந்தத் திட்டமானது நாட்டில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விநியோகத்தைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்