TNPSC Thervupettagam

எதிரி நாட்டவர்களின் சொத்துகள்

January 28 , 2020 1985 days 815 0
  • மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு (அரசு) 9,400க்கும் மேற்பட்ட எதிரி நாட்டவர்களின் சொத்துகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதைக் கண்காணிக்க இருக்கின்றது. அரசாங்கத்தின் மதிப்பீடுகளின் படி இந்தச் சொத்துகளின் மதிப்பு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
  • பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் குடியுரிமையைப் பெற்ற மக்களால் விட்டுச் சென்ற சொத்துக்கள் எதிரி நாட்டவர்களின் சொத்துகள் என்று அழைக்கப் படுகின்றன.
    • 9,280 சொத்துகள் பாகிஸ்தான் நாட்டினராலும் 126 சொத்துகள் சீன நாட்டினராலும் இந்தியாவில் விட்டுச் செல்லப்பட்டன.
  • இந்தியப் பாதுகாப்புச் சட்டம் 1962ன் கீழ் வடிவமைக்கப்பட்ட இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ், பாகிஸ்தான் குடியுரிமையைப் பெற்றவர்களின் சொத்துகள் மற்றும் நிறுவனங்களை இந்திய அரசு கையகப்படுத்தியுள்ளது.
  • 1968 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட எதிரி நாட்டவர்களின் சொத்துகள் சட்டமானது இந்தியாவிற்கான எதிரி நாட்டவர் சொத்தின் பாதுகாவலரிடம் எதிரி நாட்டவர்களது சொத்துக்கள் தொடர்ந்து இருப்பதை (பாதுகாக்கப்படுவதை) உறுதி செய்துள்ளது.
  • சில அசையும் சொத்துகளும் எதிரி நாட்டவர் சொத்துகளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
  • 2017 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டச் சட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்குவதற்காக "எதிரி நாட்டவர்களின் பொருள்" மற்றும் "எதிரி நாட்டவர்களின் நிறுவனம்" என்ற வார்த்தையின் வரையறையை விரிவுபடுத்தியுள்ளது.
    • இந்தியாவின் குடிமகனாக இருந்தாலும் அல்லது எதிரி நாட்டைச் சேராத ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தாலும் எதிரி நாட்டவரின் சட்ட வாரிசு மற்றும் வாரிசு,
    • ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்கள் அல்லது பங்காளர்களின் தேசியத்தைப் பொருட்படுத்தாமல், ஒரு எதிரி நாட்டவர் நிறுவனத்தின் அடுத்தடுத்த நிறுவனம் ஆகியவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்