எதிர்காலக் கொள்ளை நோய்களின் வாய்ப்புகள் குறித்த அறிக்கை
November 7 , 2020 1733 days 697 0
சமீபத்தில் ஐபிபிஇஎஸ் (IPBES) என்ற அமைப்பானது எதிர்காலக் கொள்ளை நோய்கள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
1918 ஆம் ஆண்டு இன்ஃபுளுயன்சா கொள்ளை நோய்க்குப் பிறகு கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த குறைந்தபட்ச 6வது கொள்ளை நோய் கோவிட் – 19 ஆகும்.
மூன்று கொள்ளை நோய்கள் இன்ஃபுளுயன்சா வைரஸ்களினால் ஏற்படுகின்றன. அதில் ஒன்று எச்ஐவி என்பதும் அதற்கு அடுத்தது சார்ஸ் மற்றும் கோவிட் - 19 ஆகியனவும் ஆகும்.
இதுவரை ஏற்பட்ட அனைத்துக் கொள்ளை நோய்களும் விலங்கு வழிப் பரவும் நோய்களாகும்.
பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சூழலியல் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான அறிவியல் கொள்கைத் தளம் (IPBES) என்பது பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் சூழலியல் சேவைகளின் பிரச்சினைகள் குறித்த அறிவியல் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றிற்கிடையேயான இடைமுகத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப் பட்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
2012 ஆம் ஆண்டில் IPBES (Intergovernmental Science-Policy Platform on Biodiversity and Ecosystem) ஆனது ஐக்கிய நாடுகளினால் உருவாக்கப் பட்டுள்ளது.