எதிர்காலத் தொழில்நுட்ப வகையிலான வட்ட வடிவ மோதுவிக் கருவி
April 23 , 2025 266 days 231 0
CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பானது, உலகின் மிகப் பெரிய எதிர்கால நுட்ப வகையிலான வட்ட வடிவ மோதுவிக் கருவியினை (FCC) உருவாக்கச் செய்வதற்கான முயற்சியில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப தடைகளையும் நீக்கி உள்ளது.
சுவிட்சர்லாந்து-பிரான்சு ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதிக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ள 91 கிலோ மீட்டர் நீளமுள்ள வட்ட வடிவச் சுரங்கப்பாதையாக FCC அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த FCC ஆனது, எதிர்பாராத ஆற்றல் அளவில் இத்துகள்களை முடுக்குவித்து மோதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கமானது, அடிப்படை விசைகள் மற்றும் துகள்களை ஆய்வு செய்வதற்காக என்று உயர் ஆற்றல் நிலைகளில் புரோட்டான்களை மோதச் செய்வதாகும்.