எதிர்கால சூரிய சக்தி உற்பத்தி திட்டங்களுக்கான ஆற்றல் சேமிப்பு
February 25 , 2025 67 days 81 0
அரசாங்கம் அனைத்து எதிர்கால சூரிய சக்தி உற்பத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்த ஏலங்களும் ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியினைச் செயல்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் (REIA) மற்றும் மாநில தொலைதொடர்பு சேவை வழங்கீட்டு நிறுவனங்களும் எதிர்கால சூரிய சக்தி உற்பத்தித் திட்டங்களுக்கான ஒப்பந்த ஏலங்களில், நிறுவப்பட்ட சூரிய மின் நிலைய திறனில் 10 சதவீதத்திற்கு சமமான குறைந்தபட்சம் இரண்டு மணிநேர எரிசக்தி உற்பத்தி அமைப்புகளிலேயே அமைந்த எரிசக்தி சேமிப்பு அமைப்புகளை (ESS) நிறுவது குறித்த திட்டத்தினை இணைக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றன.
இது மிகக் குறுகிய கால சிக்கல்களைத் தணித்து, அதிகபட்ச ஆற்றல் தேவை உள்ள காலங்களில் முக்கிய ஆதரவை வழங்கும்.
2030 ஆம் ஆண்டிற்குள் இந்தியா சுமார் 500 GW அளவிலான புதைபடிவம் சாரா திறனை அதிகரிக்க உள்ளதால், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கட்டமைப்புகளின் மீதான திறன் பயன்பாட்டை அதிகரிக்க இது உதவும்.