என்சிசி சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை
March 20 , 2020 1941 days 737 0
மத்திய ஆயுதக் காவல் படைகளின் (Central Armed Police Forces - CAPF) நேரடி ஆட்சேர்ப்புத் தேர்வுகளில் தேசிய மாணவர் படைச் சான்றிதழ் (National Cadet Corps - NCC) வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
NCCல் இந்திய இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப் பட்டுள்ளது.
தேசிய மாணவர் படை
இது இராணுவம், கடற்படை மற்றும் விமானப் பிரிவுகளைச் சேர்ந்த இளம் மாணவர்களை உள்ளடக்கிய ஒரு முப்படைச் சேவை அமைப்பாகும்.
இந்த அமைப்பின் குறிக்கோள் 'ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்' என்பதாகும்.
1948 ஆம் ஆண்டின் தேசிய மாணவர் படைச் சட்டத்தின் கீழ் தேசிய மாணவர் படைக் குழுவானது நிறுவப் பட்டது.