இதுவரை கண்டுபிடிக்கப்படாத, 107 ஆண்டுகளாக கடலில் மூழ்கி இருந்த மிகப்பெரிய கப்பல் ஒன்றை அறிவியலாளர்கள் கண்டறிந்து படம் பிடித்துள்ளனர்.
அண்டார்டிக் ஆய்வாளரான சர் எர்னெஸ்ட் சாக்லெட்டோனின் மூழ்கியக் கப்பலான தி என்டூயூரன்ஸ் கப்பலானது வெடெல் கடலின் அடிப்பகுதியில் கடந்த வார இறுதியில் கண்டறியப்பட்டது.
இந்தக் கப்பலானது 1915 ஆம் ஆண்டில் கடல் பனிக்கட்டியில் மோதி கடலில் மூழ்கியது.
தொலைந்து போன கப்பலைக் கண்டறிவதற்கான அந்தப் பணியானது, அகுல்ஹாஸ் II எனப்படும் ஒரு தென் ஆப்பிரிக்கப் பனி உடைப்புக் கப்பலைக் கொண்டு, ஃபால்க்லாண்ட்ஸ் கடல்சார் பாரம்பரிய அறக்கட்டளையின் மூலம் தொடங்கப்பட்டது.