TNPSC Thervupettagam

எப்பொழுதும் உள்ள (என்டமிக்) நிலையை எட்டும் கோவிட்-19 தொற்று

August 30 , 2021 1461 days 655 0
  • உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியாலாளர் டாக்டர் சௌமியா சுவாமி நாதன் கோவிட்-19 தொற்றானது என்டமிக் அல்லது எப்பொழுதும் உள்ள நிலையை எட்டக் கூடும் எனக் கூறியுள்ளார்.
  • இந்த அறிவிப்பின் மூலம், சில மக்களுக்குத் தொற்று ஏற்பட்டாலும் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் தொற்றுப் பரவல் விகிதம் குறைவானது முதல் மிதமானது வரை இருக்கும் என்று தெரிய வருகிறது. அந்தக் காரணங்களாவன
    • இயற்கையான நோயெதிர்ப்பு
    • தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோயெதிர்ப்பு மற்றும்
    • புவியியல் இடம் சார்ந்த மக்கள்தொகை
  • SARS-Cov-2 தொற்றானது இன்னும் சில வருடங்களில் சாதாரண சளியை விட குறைந்த தாக்கத்தைக் கொண்ட ஒரு நிலைக்கு மாறி விடும் என ஒரு மாதிரி ஆய்வில் கூறப் பட்டுள்ளது.

குறிப்பு

  • ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள மக்கள்தொகையின் மத்தியில் நிலவும் ஒரு நோய் அல்லது தொற்றுநோய் காரணி தொடர்ந்து அப்பகுதியில் நிலவி வருதல் () வழக்கமாக பரவி வருதல் என்பதைக் குறிப்பதே என்டமிக் நிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்