டெல்லி-NCR பகுதியில் காற்று மாசுபாடு தொடர்பான 40 ஆண்டுகள் பழமையான எம்.சி. மேத்தா Vs இந்திய ஒன்றியம் வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
1985 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தாவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு சுற்றுச்சூழல் சட்டத்தில் ஒரு மைல்கல் பொதுநல வழக்காக அமைந்தது.
இந்த வழக்கை அடுத்து, டெல்லி போக்குவரத்தில் CNG பயன்பாடு மற்றும் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
தற்போதைய சிக்கல்களை இன்னும் திறம்பட கையாளுவதற்காக, நீதிமன்றம் இப்போது "தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனைகள்" என்ற தலைப்பில் தானாக முன்வந்து ஒரு வழக்கைத் தொடங்கி உள்ளது.
சிறந்த வழக்கு மேலாண்மைக்காக, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைத் தனித் தனி நீதிப் பேராணை மனுக்களாக மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நடவடிக்கை, தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான சிக்கல்களை விரைவாகவும், அதிக கவனத்துடனும் கையாளுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.