TNPSC Thervupettagam
January 11 , 2026 12 days 82 0
  • ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (JNCASR) அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் பனி உருவாவதை உருவகப்படுத்தவும் எம்பெம்பா விளைவை உறுதிப்படுத்தவும் மீக்கணினிகளைப் பயன்படுத்தினர்.
  • எம்பெம்பா விளைவு என்பது சில நிபந்தனைகளின் கீழ் சூடான நீர் குளிர்ந்த நீரை விட வேகமாக உறைந்து போகும் ஒரு நிகழ்வு ஆகும்.
  • அரிஸ்டாட்டில் தனது Meteorologica புத்தகத்தில் இந்த விளைவைக் குறிப்பிட்டார்.
  • தான்சானிய மாணவர் எராஸ்டோ எம்பெம்பா 1969 ஆம் ஆண்டில் இந்த நிகழ்வின் மீதான கவனத்தை வெளிக் கொணர்ந்தார்.
  • சூடான நீரில் உள்ள மிக நுண்ணிய குமிழ்கள், வேகமான ஆவியாதல் மற்றும் வெப்பச் சலனம் ஆகியவை சூடான நீரை வேகமாக குளிர்விக்கச் செய்யும்.
  • இந்த விளைவு தண்ணீருக்கு மட்டுமல்ல; திரவத்திலிருந்து திடமாக மாறும் போது மற்ற திரவங்களிலும் ஏற்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்