எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா ஆகியவற்றிற்கான உலகளாவிய நிதி
September 5 , 2019 2303 days 727 0
6வது நிதி கொடுத்தல் சுழற்சி முறைக்காக (2020-22 ஆம் ஆண்டு) எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா ஆகியவற்றிற்கான உலகளாவிய நிதிக்கு (Global Fund for AIDS, TB and Malaria - GFTAM) இந்தியா 22 மில்லியன் டாலர் பங்களிப்பை அறிவித்துள்ளது.
எய்ட்ஸ், காச நோய் மற்றும் மலேரியா ஆகியவற்றின் தடுத்தல், சிகிச்சை மற்றும் பராமரிப்புத் திட்டங்களின் உலகின் மிகப்பெரிய நிதியாளர் அமைப்பு உலகளாவிய நிதி ஆகும்.
2002 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய நிதியத்துடன் ஒரு நிலையான பங்குரிமையை இந்தியா பகிர்ந்து வருகின்றது. அந்த அமைப்பில் இந்தியா பெறுநராகவும் நன்கொடையாளராகவும் உள்ளது.