எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் – சென்னை
October 15 , 2017 2776 days 1079 0
உலகின் மிகப்பெரிய எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம் (Combustion Research Centre) சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
இதன் உள்கட்டமைப்பு வசதிகள் உலகில் எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரியதாக அமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய மையம்
இந்த மையத்தில் உந்தூர்தி , வெப்ப ஆற்றல் , விண்வெளி உந்துதல் அமைப்பு போன்றவற்றைப் பற்றி ஆராய்ச்சிகள் நடத்தப்படும். மேலும் புவிஈர்ப்பு விசை இல்லா விண்வெளியில் எரிபொருள் எரிவது குறித்த ‘Microgravity Combustion’ எனும் மிகக்குறைந்த ஈர்ப்பு விசை எரியூட்டல் குறித்தும் ஆராய்ச்சிகள் சிறிய அளவில் இங்கு நடத்தப்படும்.
இந்த மையம் இந்திய விஞ்ஞான சமுதாயத்திற்கு பெரும் ஊக்கமளிக்கும். மேலும் மாற்று எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிக்கும் பெரும்பங்காற்றும்.
இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Department of Science and Technology- DST) கீழ் இயங்கும் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தால் இந்த மையம் ஆதரிக்கப்படுகிறது.