கௌஹாத்தியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது பல்வேறு கூறுகளை தேர்ந்தெடுத்துப் பிரிக்கும் கரிமக் கூழ்ம உருவாக்கக் காரணி/ஆர்கனோஜெலேட்டர் (PSOG) என்ற பொருளை உருவாக்கியது.
PSOG ஆனது பெட்ரோலில் கலந்த மண்ணெண்ணெய்யைக் கண்டறிய உதவுகிறது, மேலும் தண்ணீரில் இருந்து எண்ணெய் கசிவுகளை நீக்குகிறது.
இது எண்ணெயை எளிதில் சேகரிக்கக்கூடிய ஒரு திடக் கூழ்மம் ஆக / ஜெல்லாக மாற்றுகிறது.
அதி மூலக்கூறு சுய ஒருங்கிணைவு மூலம் செயல்படுகின்ற PSOG, எண்ணெய்களுக்கான தொடர்பு கொள்ளும் தன்மையை அளிக்கிறது.
இது எரிபொருள் பாதுகாப்பு மற்றும் எண்ணெய்-கசிவுகளை சுத்தம் செய்வதற்கான குறைந்த விலையிலான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையை வழங்குகிறது.