எரிவாயு மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் மகிழுந்துகளின் விற்பனைக்குத் தடை
March 8 , 2023 901 days 407 0
ஐரோப்பிய ஒன்றியத்தில் எரிவாயு மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களில் இயங்கும் புதிய மகிழுந்துகளின் விற்பனையை 2035 ஆம் ஆண்டு முதல் தடை செய்யும் ஒரு சட்டத்திற்கு ஐரோப்பியப் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆனால் அந்நாட்டு உற்பத்தியாளர்கள் மகிழுந்துகளைத் தயாரித்து மற்ற நாடுகளில் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதியச் சட்டமானது 2035 ஆம் ஆண்டில் புதிய பயணிகள் மகிழுந்துகள் மற்றும் இலகுரக வணிக வாகனங்களுக்கானச் சுழிய அளவு CO2 உமிழ்வை நோக்கிய ஒரு பாதையினை அமைக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் விற்கப்படும் மகிழுந்துகள் மற்றும் இலகுரக வாகனங்களின் முழு பயன்பாட்டுச் சுழற்சி முழுவதும் வெளியிடப்படும் CO2 உமிழ்வுகள் பற்றியத் தரவை மதிப்பிடுவதற்கும் அது குறித்து அறிக்கை வழங்கச் செய்வதற்குமான ஒரு வழிமுறையை 2025 ஆம் ஆண்டிற்குள் ஆணையம் முன் வைக்க உள்ளது.
இந்தக் கட்டுப்பாடானது சுழிய அளவு மற்றும் குறைந்த அளவு உமிழ்வினை வெளியிடும் வாகனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.