மும்பை காலநிலை வார அனுசரிப்பின் போது, இளவரசர் வில்லியம் நிறுவிய எர்த் ஷூட் பரிசு 2026 நிகழ்வை மும்பை முதன்முறையாக நடத்தவுள்ளது.
இந்தப் பரிசானது, காலநிலை நடவடிக்கை, பல்லுயிர்ப் பெருக்கம், தூய்மையான எரி சக்தி, காற்றின் தரம் மற்றும் கடல் மறுசீரமைப்பு ஆகியவற்றில் தீர்வுகளுக்காக வேண்டி ஆண்டுதோறும் ஐந்து உலகளாவியக் கண்டுபிடிப்பாளர்களுக்கு £1 மில்லியன் வழங்குகிறது.
பருவநிலை தலைமைத்துவத்திலும் நிலையான கண்டுபிடிப்புகளிலும் இந்தியாவின் பங்கை இந்த நிகழ்வை நடத்துவதற்கான ஒரு காரணமாக இளவரசர் வில்லியம் எடுத்துரைத்தார்.
2070 ஆம் ஆண்டுக்குள் நிகர-சுழிய உமிழ்வை அடைவதற்கும் பசுமைத் தொழில் நுட்பத்தை ஊக்குவிப்பதற்கும் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த முயற்சியானது வலுப்படுத்துகிறது.