TNPSC Thervupettagam

எலிஃபண்டா தீவில் 1500 ஆண்டுகள் பழமையான நீர்த்தேக்கம்

April 11 , 2026 15 hrs 0 min 61 0
  • மும்பைக்கு கிழக்கே உள்ள எலிஃபண்டா தீவில் 1,500 ஆண்டுகள் பழமையான படிக்கட்டுகளுடன் கூடிய நீர்த்தேக்கத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) கண்டுபிடித்துள்ளது.
  • பண்டைய மக்களின் மேம்பட்ட நீர் மேலாண்மையைக் காட்டுகின்ற இந்த நீர்த் தேக்கம் T-வடிவத்தில் 20 கல் படிகளுடன் உள்ளது.
  • காலச்சூரி வம்சத்தின் மன்னரான கிருஷ்ணராஜாவின் நாணயங்கள் உட்பட சுமார் 60 நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • ரோம் மற்றும் மேற்கு ஆசியாவுடனான வர்த்தகத் தொடர்புகளைப் பற்றி ஆம்போரா மற்றும் ஜாடிகள் குறிப்பிடுகின்றன.
  • மணிகள், வளையல்கள் மற்றும் சுட்டமண் பொருட்கள் போன்ற கலைப்பொருட்கள் கலாச்சார மற்றும் கைவினைச் செயல்பாடுகளைக் காட்டுகின்றன.
  • இத்தீவு பல துறைமுகங்களைக் கொண்ட ஒரு முக்கியமான பண்டைய வர்த்தக மையமாக இருந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்