தன் இரையின் எச்சங்களை அணிந்திருக்கும் ஒரு புதிய மாமிச உண்ணி கம்பளிப் பூச்சி இனமானது "எலும்பு சேகரிப்பான்" என்று அழைக்கப் படுகிறது.
இந்த விசித்திரமான பூச்சி ஹவாய் தீவான ஓஹுவில் மட்டுமே காணப்படுகிறது.
இது சிலந்தி வலைகளில் ஊர்ந்து சென்று, அதில் சிக்கிய பூச்சிகளை உண்டு, அதன் பட்டு போன்ற இழை உறையை அவற்றின் உடல் பாகங்களில் அணிகிறது.
அவை லைக்கன், மணல் மற்றும் பிற பொருட்களால் மூடப்பட்டப் பாதுகாப்பு உறைகளைப் பின்னுவதற்கு என்று பட்டுச் சுரப்பிகளைப் பயன்படுத்துகின்றன.
இது தான் எறும்புத் தலைகள் மற்றும் ஈ இறக்கைகள் ஆகியவற்றை முதன்முதலில் பயன்படுத்தியது.
ஹவாயில் காணப்படும் எலும்பு சேகரிப்பான் இனங்கள் ஒன்றையொன்று சாப்பிடும் இனமாகும்.
எலும்பு சேகரிப்பான் இனங்களின் தோற்றம் ஆனது குறைந்தது சுமார் 6 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கருதப்படுகிறது இதனால் இது ஹவாய் தீவுகளை விட பழமையானதாக குறிப்பிடப்படுகிறது.