எல்லைகளைக் கடந்த நிருபர்கள்
January 4 , 2021
1656 days
721
- கடந்த ஆண்டு மட்டும் உலகளவில் குறைந்தது 50 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.
- 2019 ஆம் ஆண்டில் 53 ஆக இருந்த இந்தக் கொலைகளின் எண்ணிக்கையானது ஒட்டு மொத்த அளவில் தற்பொழுது குறைந்துள்ளது.
- மெக்ஸிகோ நாடானது 2020 ஆம் ஆண்டில் ஊடகவியலாளர்களுக்கு மிக மோசமான நாடாக இருக்கின்றது.
- இதில் ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து ஈராக் நாடானது இரண்டாவது இடத்தில் உள்ளது.
- எல்லைகளைக் கடந்த நிருபர்கள் அறிக்கையின் கூற்றுப் படி இந்தத் தரவானது வெளியிடப் பட்டுள்ளது.
- இது பிரான்சின் பாரிசைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு சர்வதேச இலாப நோக்கற்ற மற்றும் ஒரு அரசு சாரா நிறுவனமாகும்.

Post Views:
721