TNPSC Thervupettagam

எல்லைப் பாதுகாப்பு படை அதிகார வரம்பு

October 17 , 2021 1401 days 606 0
  • பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் உள்ள சர்வதேச எல்லைகளில் எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பினை 50 கி.மீ. தொலைவு வரை உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.
  • அதே சமயம், குஜராத் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்பு படையின் செயல்பாட்டுப் பகுதியை 80 கிலோ மீட்டரிலிருந்து 50 கிலோ மீட்டராகவும் அந்த அமைச்சகம் குறைத்து உள்ளது.
  • 1968 ஆம் ஆண்டு எல்லைப் பாதுகாப்பு படைச் சட்டத்தின் கீழ் இந்த அதிகாரங்களைப் பயன்படுத்துவதாக அரசு கூறியது.
  • எல்லைப் பாதுகாப்புப் படையானது கைது, தேடுதல் மற்றும் பறிமுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அதிகாரங்கள் இந்த மாநிலங்களில் 15 கி.மீ. தொலைவு வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்