எல்லை சாலைகள் அமைப்பின் 61வது எழுச்சி தினம் – மே 07
May 9 , 2021 1548 days 736 0
எல்லை சாலைகள் அமைப்பானது (BRO – Border Roads Organisation) 1960 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது.
இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் தொலைதூரப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்றவற்றை ஒரு முதன்மையான நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பானது உருவாக்கப்பட்டது.
2021 ஆம் ஆண்டு மே 07 ஆம் தேதியன்று BRO தனது 61வது எழுச்சி (நிறுவப்பட்ட நாள்) தினத்தினைக் கொண்டாடியது.
எல்லைச் சாலைகள் அமைப்பு
இது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு முன்னணி சாலைக் கட்டமைப்பு அமைப்பாகும்.
இந்திய எல்லைப் பகுதிகளில் சாலை இணைப்பினை உருவாக்குவதே இதன் முதன்மையான நோக்கமாகும்.
மேலும் இந்த அமைப்பானது இந்தியாவின் அனைத்து உத்திசார் மற்றும் மூலோபய இலக்குகளை அடைவதற்காக இந்திய எல்லைகளினூடே உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியும் மேம்படுத்தியும் அவற்றைப் பராமரித்தும் வருகிறது.