சூடானின் வடக்கு டார்பூரில் உள்ள எல்-ஃபாஷர் நகரத்தை முற்றுகையும் கைப்பற்றலும், ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட சுயாதீனமான உண்மைக் கண்டறியும் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து "இனப்படுகொலையின் அடையாளங்களை" கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் (RSF) எல்-ஃபாஷர் 18 மாத முற்றுகையின் கீழ் இருந்தது என்பதோடுமேலும் 2025 அக்டோபர் மாத இறுதியில் நகரம் RSF வசம் வீழ்ந்தது.
முற்றுகையின் போதும் அதற்குப் பின்னரும் இன ரீதியாக இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு அழிப்பை ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
ஜகாவா மற்றும் ஃபர் சமூகங்கள் போன்ற அரபு அல்லாத இனக் குழுக்களை குறி வைத்ததாக RSF மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்துஎல்-ஃபாஷரை முற்றுகையிட்டு கைப்பற்றியது தொடர்பான அட்டூழியங்களில் ஈடுபட்டதற்காக மூன்று RSF தளபதிகளை அமெரிக்கா தடை செய்தது.