TNPSC Thervupettagam

எல் அலாம்யின் கூட்டறிக்கை

October 8 , 2026 3 days 59 0
  • எகிப்தின் நியூ அலாம்யினில் நடைபெற்ற நாற்கர உச்சிமாநாட்டிற்குப் பிறகு எகிப்து, சூடான், எரித்திரியா மற்றும் சோமாலியா ஆகிய நாடுகள் எல் அலாம்யின் கூட்டறிக்கையை வெளியிட்டன.
  • இந்த நான்கு நாடுகளும் அரசின் இறையாண்மை, செங்கடல் ஆளுமை மற்றும் நீர் உரிமைகளை வலியுறுத்தியதோடு பிராந்திய நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதையும் நிராகரித்தன.
  • அவர்கள் சூடானின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப் பாட்டிற்கான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியதோடு இணை அமைப்புகளை உருவாக்குவதையும் நிராகரித்தனர்.
  • அவர்கள் சோமாலிலாந்திற்கான அங்கீகாரம் அல்லது ஆதரவை நிராகரித்ததுடன், செங்கடல் ஆளுமை என்பது அதன் கரையோர நாடுகளின் பொறுப்பு என்றும் தெரிவித்தனர்.
  • நைல் நதி உள்ளிட்ட எல்லை தாண்டிய நதிகள் தொடர்பான சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு அவர்கள் அழைப்பு விடுத்தனர், மேலும் எகிப்து மற்றும் சூடானின் தற்போதைய நீர் பயன்பாடுகளைப் பாதிக்கும் ஒருதலைப் பட்ச நடவடிக்கைகளை எதிர்த்தனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்