TNPSC Thervupettagam

எல் நினோ மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு

November 16 , 2026 4 days 102 0
  • அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் எல் நினோ காரணமாக $11 டிரில்லியன் உலகளாவிய வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்று COP31 மாநாட்டில் சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD) வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
  • 2026–27 எல் நினோ ஆனது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உச்சத்தை அடையக்கூடும்; இது வேளாண்மை மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது.
  • தென் ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நெல் உற்பத்தி செய்யும் பகுதிகள் அதிகரித்த வேளாண் வறட்சி அபாயங்களை எதிர்கொள்கின்றன.
  • உலக உணவுத் திட்டத்தின் (WFP) மதிப்பீடுகளின்படி, 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 4.9 கோடி (49 மில்லியன்) மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும்.
  • நிதி நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வதன் மூலம் ஏற்படும் 9.8% இழப்புக் குறைப்புடன் ஒப்பிடுகையில், வேளாண் இடுபொருள் ஆதரவு, சந்தை அணுகல் மற்றும் நிதி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமான இழப்பை 18.7% வரை குறைக்க முடியும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்