- நகரங்களில் உள்ள குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவதற்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர விவகாரத்துறை அமைச்சகமானது இரண்டு புதிய குறியீடுகளை அறிமுகப் படுத்தியுள்ளது. அவை,
- வாழ்வாதார எளிமையானக்கல் குறியீடு (Ease of Living Index - EoLI) மற்றும்
- நகராட்சி செயல்திறன் குறியீடு (Municipal Performance Index - MPI).
வாழ்வாதார எளிமையானக்கல் குறியீடு:
- இது நாட்டில் உள்ள நகரங்களைப் பற்றிய முழுமையான தரவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட கொள்கை நடவடிக்கைகளுக்குத் தேவையான தகவல்களை உருவாக்கும் விதமாக இது அமைந்துள்ளது.
நகராட்சி செயல்திறன் குறியீடு:
- ஐந்து ஆக்க உணர்வுகளின் அடிப்படையில் நகராட்சிகளின் செயல்திறனை மதிப்பிடுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஐந்து ஆக்க உணர்வுகளில் சேவை, நிதி, திட்டமிடல், தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகம் ஆகியவை அடங்கும்.